ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்வாங்கவில்லை என்றும், சரியான நேரத்தில் எழுந்து வரும் என்றும் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, எங்களுக்கு எவரும் சவாலாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை பாலஸ்தீன தூதரகத்திற்கு சென்றிருந்த போது, அங்கே முன்னால் இருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் மகிந்த ராஜபக்ஷவின் பதில்களும் வருமாறு,
கேள்வி: உங்களுடைய அரசியல் நடவடிக்கைகள் எப்படிப் போகின்றது?
பதில்: செய்துகொண்டுதான் போகின்றோம்.
கேள்வி: புதிதாக கட்சிகள் அமைக்கப்படுகின்றன. அது தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: இது எப்போதும் நடப்பதுதானே. இன்று, நேற்றா நடக்கின்றது. தேர்தல்கள் நெருங்கும் போது கட்சிகள் புதிதாக உருவாகும்தானே. ஆனால் இறுதியில் போட்டி மூன்று கட்சிகளுக்கு இடையில்தானே நடக்கும்.
கேள்வி: போட்டியில் நீங்கள் இருப்பீர்களா?
பதில்: நிச்சயமாக இருப்பேன்.
கேள்வி: மொட்டு பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றதே?
பதில்: அப்படி பின்வாங்கவில்லை. சரியான நேரத்தில் எழுந்து வரும்.
கேள்வி: உங்களுக்கு தலைமைப் பதவி கிடைக்குமா?
பதில்: நிச்சயமாக
கேள்வி: உங்களுக்கு சவாலாக இருப்பது யார்?
பதில்: அவ்வாறு சவாலாக எவரும் கிடையாது.