நாட்டில் உருவெடுத்த இரண்டாவது தீவிரவாத அமைப்பு மக்கள் விடுதலை முன்னணியே

Share

விடுதலை புலிகளுக்கு அடுத்தப்படியாக நாட்டில் உருவெடுத்த இரண்டாவது தீவிரவாத அமைப்பே மக்கள் விடுதலை முன்னணியென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்

நாவலபிட்டி நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே

அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே.

மக்கள் விடுதலை முன்னணி மக்களின் அடையாள அட்டையை பரித்து, தங்க ஆபகரணங்களை கொள்ளையடித்து கழுத்தைவெட்டியது.

அனைத்தையும் செய்தது மக்கள் விடுதலை முன்னணி ஆனால் அவர்களுக்கு மக்களுக்கு எந்த ஒரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்ததில்லை.

இன்று அவர்களுடைய கட்சியினை திசைகாட்டியென்று பெயர் சூட்டி கொண்டுள்ளார்கள் 2019ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிய ஜனாதிபதி ஊடாக புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கின்றோம்.

கோட்டபாய ரரஜபக்ஸவிற்கு 69 இலட்சம் பேர் வாக்களித்தனர்.

ஆனால் தற்பொழு ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக செயற்பட்டு கொண்டிருக்கிறார்.

கோட்டபாய ராஜபக்ஸவிற்கு வாக்களித்த நாம் எதிர்வரும் காலங்களில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கவேண்டும்.

2019ஆம் ஆண்டு ஒன்பது மாதங்கள் கடந்த பின் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார ரீதியாக நாம் பாதிப்படைந்தோம்.

இந்த பிரச்சினைக்கு நாம் மட்டுமல்ல அனைத்து நாடுகளும்

முகம் கொடுக்க நேரீட்டது அதனால் வெளிநாட்டு சுற்றுலா துறை வீழ்ச்சியடைந்தது.

முன்னய காலத்தை விட தற்பொழுது மின்சாரம் எரிவாயு எரிப்பொருள் அனைத்தும் காணப்படுகிறது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்து மக்கள் இன்று வாழக்கூடிய நிலையில் இருக்கின்றோம் என்பதனை ஞாபகப்படுத்த வேண்டும்.

சீனா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் எமக்கு உதவி செய்வதற்கு முன்வந்துள்ளது.

அது மட்டுமல்ல அதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திட உள்ளது.

2010 மற்றும் அதற்கு முன்புள்ள காலப்பகுதியில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் மேற்கொண்டோம்.

2019ம் ஆண்டு எமது அரசாங்கத்தை அமைத்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்ல முடியாமல் போய்விட்டது

ஆகவே எதிர்வரும் அரசாங்கத்தில் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பல அபிவிருத்தி திட்டகளை முன்னெடுப்போம்.” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு