நானும் சுமந்திரனும் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இருக்கும்

Share

ஆசிரியரும் மாணவரும் என நானும் சுமந்திரனும் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இருக்கும் போலத் தெரிகிறது என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்குத் தெரிந்தவரையில் இந்தியப் பிரதமருக்குத் தமிழ் கட்சிகள் அனுப்பிய கடிதமானது இன்னும் அவரைச் சென்றடையவில்லை. அப்படித்தான் தகவல்கள் கிடைத்தன.

இந்தியப் பிரதமரிடம் கடிதம் சென்றடைந்தது என்பது சுமந்திரனுக்கு நன்றாகத் தெரிந்து இருக்கும் எனில், எதற்காக இந்திய பிரதமர் அந்தக் கடிதத்திற்குரிய பதிலை அனுப்பவில்லை என்ற கேள்விக்கும் சுமந்திரனே பதில் சொல்ல வேண்டும்.

சுமந்திரன் சொல்வதுபோல் கடிதம் இந்தியப் பிரதமரிடம் சென்றடைந்திருந்தால் அதற்குரிய பதில் கடிதத்தை இந்தியப் பிரதமர் அனுப்பாதமைக்கு ஏதேனும் காரணம் ஒன்று இருக்க வேண்டும். என்னிடம் சொல்லப்பட்டது என்னவெனில் அது ஓர் இடத்தில் தேங்கி நிற்கின்றது என்பதுதான்.

பிரதமரிடம் சென்றடையவில்லை எனவும் கூறப்பட்டது. இந்தியப் பிரதமருடைய காரியாலயத்திற்கு செல்லும் கடிதங்கள் யாவற்றிற்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பதில் எழுதப்படும் எனக் கூறப்பட்டது. அவ்வாறான பதில் வராததை வைத்துதான் இந்தியப்பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் அனுப்பிய கடிதம் சொல்லவில்லை எனச் சொல்ல வேண்டி ஏற்பட்டது.

இந்தியத் தூதுவர் பிரதமர் மோடியிடம் தமிழ் கட்சிகளின் கடிதத்தைக் கையளித்துவிட்டு சுமந்திரன் ஒரு பெரியஆள் என எண்ணித் தான் கடிதத்தைக் கையளித்துவிட்டார் எனத் தூதுவர் தொலைபேசியில் சொன்னார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.

சிகிச்சை சுமந்திரனுக்கும் தேவைப்படலாம். எனக்கும் தேவையாக இருக்கலாம். நாங்கள் எல்லோரும் மனதால் பிரச்சினை பட்டவர்கள்தானே. ஆசிரியரும் மாணவரும் என நானும் சுமந்திரனும் இணைந்து சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இருக்கும் போல தெரிகிறது எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு