இந்தியா – இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுமென அறிவிப்பு வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகம் – காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து 50 பேரும், காங்கேசன்துறையிலிருந்து 30 பேரும் கப்பலில் பயணம் செய்தனர்.
இந்நிலையில் இன்று போதிய அளவு டிக்கெட் முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மாத்திரமே இந்த பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.