“மக்கள் புரட்சியை நோக்கி கட்சி சார்பற்ற நிராயுதபாணி போராட்டம்” என்ற தொனிப்பொருளில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தலைமையில் யக்கல நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்போதைய அரசாங்கம் மக்கள் போராட்டத்திற்கு எதிராகவே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள பொன்சேகா,
மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் ஊழலற்ற அரசியலை நிராகரித்து மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியே தாம் செய்வது என்றும், இது அரசியல் கட்சியல்ல, மக்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதே தனது நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.