2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வனப் பாதுகாப்புத் துறை 34,000 ஹெக்டேர் நிலத்தை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்காக விடுவித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புகள் கூறுகின்றன.
2021ஆம் ஆண்டில் அதிகபட்ச காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பேரில் பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்ட காணியின் அளவு 32,582 ஹெக்டேயருக்கும் அதிகமாகும். ஆண்டு உரிமத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளுக்காக 1,518 ஹெக்டேர் நிலம் விடுவிக்கப்பட்டது.