தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசா இன்று 13.10.2023 வெள்ளிக்கிழமை காலமானார்.
இறுதிக்கிரியைகள் 15.10.2023 ஞாயிற்றுக்கிழமைமாலை 3, மணிக்கு 68 புகையிரத நிலையவீதி வீதி, மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில உயிரிழந்துள்ளார்.
காலம் சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், கோட்டைக்கல்லாற்றில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர்.தற்போது மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் வசித்து வந்தார்