சம்மாந்துறையில் ஆலயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களால் பரபரப்பு!

Share

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கிணற்றில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பரவுப்பணியின் போதே இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் LMG துப்பாக்கி தோட்டாக்கள் 57, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு இரண்டு, 261 தோட்டாக்கள், 0.22 துப்பாக்கிக்குரிய வெற்று தோட்டாக்கள் 46 அதற்குரிய தோட்டாக்கள் 3,எம் 16 துப்பாக்கிகுரிய தோட்டாக்கள் 11, ஒரு சுடர் துப்பாக்கி (Flare Gun) ஆகிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு