மீனவர்களுக்கு நன்மை செய்வதாக இருந்தால் டக்ளஸ் அமைச்சு பதவியை துறக்கவேண்டும்

Share

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்வதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பிர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய இழுவைப் படகு விடயம் குறித்து பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் எதிர்மறையான கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் தினேஸ் குணவர்த்தன இந்திய இழுவை படகுகளுக்கு பாஸ் அடிப்படையில் அனுமதி வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு ஒரு துளியேனும் அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அத்துமீறிய மீன்பிடி இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. இதனை ஏன் அமைச்சர் கவனிப்பதில்லை.

அதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இழுவைப்படகு இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமாத்திரமின்றி அமைச்சருக்கு மாதமொன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுப்பதாகவும் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.

மீன்பிடி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்தமையே வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களுக்கும், தென்னிந்திய தமிழர்களுக்கும் இடையில் இன முருகலை ஏற்படுத்துவதே.

கடற்றொழில் அமைச்சுக்கு பொருத்தமற்ற ஒருவரையே அமைச்சராக நியமித்துள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாயால் சொல்வதை நடைமுறையில் செயற்படுத்துவதில்லை.

மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது வேறு ஏதாவது அமைச்சைப் பொறுப்பேற்கவேண்டும்” என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு