‘ரணில் – ராஜபக்ச’ அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க சதி

Share

ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தால் மக்களை ஒடுக்கு முறைக்கு உள்ளாக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது என ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஜனநாயகத்தை சகல விதங்களிலும் மீறி இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டியிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தால் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடக்க வேண்டிய மாகாண சபை தேர்தலையும் நான்கு வருடங்களாக பிற்போட்டுள்ளனர். அவ்வாறே நாடாளுமன்றத் தேர்தலையும்,ஜனாதிபதி தேர்தலையும் கூட்டு சதிகள் மூலம் ஒத்திவைக்க மந்திரம் ஓதி வருகின்றனர்.

மக்கள் எதிர்ப்பை அடக்க பல்வேறு சட்ட மூலங்களை கொண்டு வருகின்றனர். ஒரு புறம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்றும் மறுபுறம் நிகழ் நிலை காப்பு என்றும் பல்வேறு சட்டங்களையும் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

மக்கள் கருத்துக்கு இடமளிக்காது ஆட்சியில் தொடர்ந்தும் நீடிக்கவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என ரணில் – ராஜபக்ச அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.

அரசாங்கத்தின் மக்கள் விரோத சட்ட மூலங்களை எதிர்த்து நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நாடாளுமன்றத்தில் எதிராக குரல் எழுப்பி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அவ்வாறே நாடாளுமன்றத்திற்கு வெளியே சகலரையும் இணைத்துக் கொண்டு இதற்கு எதிராக செயற்படுவோம்.அதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும்.

நாட்டில் பாதல உலக நடவடிக்கை அதிகரித்துள்ளன. பாதால கொலைகள் அதிகமாக நடந்து வரும் நிலையில் நாட்டிற்கு பொலிஸ் மா அதிபர் ஒருவர் கூட இல்லை.

பொலிஸ்மா அதிபர் பதவி காலம் முடிவடைந்துள்ளது. பொலிஸ் துறையின் நடவடிக்கைகளை கூட திறனாக முன்னெடுக்க முடியாதுள்ளது“ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு