வட கடலில் மீன்பிடியில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்க இலங்கை பிரதமர் முன்வந்துள்ளதற்கு மீனவர் சங்க தலைவர் ஒருவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தன, தமிழ்நாடு தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், வடகடலில் மீன்பிடியில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான இந்தியாவின் முன்மொழிவு குறித்து எழுப்பப்ட்ட கேள்விக்கு அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதாக பிரதமர் பதிலளித்தார்.
“அது தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஜனாதிபதி இந்தியா வந்தபோது இது குறித்து பேசினார்“ எனவும் பிரதமர் பதிலளித்தார்.
இந்த விடயம் குறித்து பரிசீலிப்பீர்களா என நெறியாளர் வினவிய போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார்.
“ஆமாம், தயார். இரு தரப்பிலும் மீனவர்களின் ஆதரவு அவசியம். இது அரசு சம்பந்தப்பட்ட வியம் இல்லை. மீனவர்கள் சம்பந்தப்பட்ட வியம். இந்த வியத்தில் புரிதல் அவசியம்.” எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழில் வலையமைப்பின் செயலாளர் என்.எம்.ஆலம், இலங்கை அரசு வடக்கு மீனவர்களையும், தென்பகுதி மீனவர்களையும் இரண்டு விதமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
“வடக்கில் உள்ள மீனவர்களை ஒரு கண்ணோட்டத்திலும், தெற்கில் உள்ள மீனவ சமூகத்தை இன்னொரு கோணத்திலும் பார்க்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் வடமாகாணத்தை தமிழ் பேசும் மக்கள் என்றும் தமிழ் மக்களின் பிரதேசம் என்றும் வரையறுத்துள்ளது.
இந்திய மீனவர்கள் நீர்கொழும்பு அல்லது சிலாபத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தக் கருத்தை பிரதமர் வெளியிடுவாரா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மீனவர் சங்கத் தலைவர் என். எம். வடக்கில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கும் இந்த வருமானத்தையே நம்பியுள்ளனர். ஆகவே, பிரதமரின் இந்த கருத்தால் வடக்கு மீனவர்களை விற்பனை செய்ய அரசாங்கம் பார்க்கிறதா என்றே சந்தேகம் எழுகிறது.
“வளங்களை விற்று பணம் சம்பாதிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். வட கடல் பிராந்தியத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் அதனையே நம்பியுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டோம் எனவும் என்.எம்.ஆலம் வலியுறுத்தினார்.