மாத்தளை ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் – மாத்தளை மார்க்கங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபடும் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது குழந்தையின் முன்பள்ளியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வரும் போது வீதியின் எதிர்புறத்தில் இருந்து வந்த பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் சாரதியின் கவனக்குறைவே இவ்விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் மாத்தளையில் வசிக்கும் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
இந்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த குழந்தை மாத்தளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.