முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளுத்கமயில் உள்ள மலை விகாரையொன்றுக்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் மாத்திரம் நான்கு விகாரைகளில் முன்னாள் ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
இங்கு கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி,
“புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்கள் முன்வந்தால் நாம் முழுயைான ஆதரவை வழங்குவோம்.
பொதுஜன பெரமுனவுக்கு இளம் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். கட்சியின் தலைமையிலும் மாற்றங்கள் இடம்பெறும். நாமே தொடர்ந்து தலைமைத்துவத்தில் இருக்க முடியாது. புதியவர்கள் முன்வர வேண்டும்“ என்றார்.
கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி சமய நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக விகாரைகள், கோயில்கள் உட்பட பல்வேறு மத ஸ்தலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்வார்.
சிறிதுகாலம் அவர் வழிபாடுகளில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருந்த நிலையில், மீண்டும் அவர் தமது ஆன்மீக பயணங்களை ஆரம்பித்துள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக அவர் ஆன்மீக பயங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.