மனித சங்கிலி போராட்டம் தோல்வியுற்றதும், ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுகிறார்கள்;தமிழ் கட்சிகளை விளாசும் சமூக ஆர்வலர்கள்

Share

மனித சங்கிலி போராட்டம் தோல்வியுற்றதும் தமிழ் கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுகிறார்கள் என சமூக செயற்பாட்டாளர் மைக்கல் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

தற்போதைய சூழ்நிலையில் சகல தமிழ் கட்சிகளும் இணைந்து ஒரு கர்த்தால் போராட்டத்தினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளன.

கடந்த வாரம் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்திய மனித சங்கிலி போராட்டத்தை பார்த்தால், அந்த போராட்டம் யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்கு கூட ஆட்கள் இல்லை.

சாதாரணமாக பார்த்தால் பிரதேச சபை, மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செயற்படுபவர்கள், தமிழ் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அவ்வாறானவர்கள் பங்குபற்றியிருந்தால் கூட 2000 பேருக்கு மேல் போராட்டத்திற்கு பங்காற்றி இருப்பார்கள். இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்து எமது பிரதேசத்தில் செயல்படுத்தி பிரயோசனமில்லை.

மனித சங்கிலி போராட்டமானது வெற்றியளிக்கவில்லை என்பதை உணர்ந்து தற்போது பொதுமக்களை ஏவி விடுகின்றார்கள். இந்த ஹர்த்தாலை நடத்தி என்னதான் காணப் போகின்றார்கள்.

குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ளவர்கள் அன்றாட வேலை மூலம் தமது வாழ்வாதாரத்தை செயற்படுத்துவோர் இந்த ஹர்த்தாலினால் பாதிக்கப்படுவார்கள்.

ஏன் இந்த அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்தில் அல்லது ஒரு சத்தியாகிரக போராட்டத்தில் குதிக்கக்கூடாது. ஏன் மக்களை ஏவி விடுகின்றார்கள். எதிர்வரும் நாட்களில் இவ்வாறான மக்களைக் கேடயமாக பயன்படுத்தும் போராட்டங்கள் தமிழ் கட்சிகள் நிறுத்த வேண்டும்.

குறிப்பாக அந்த காலத்தில் அமிர்தலிங்கம் போன்றவர்கள் சத்தியாகிரக போராட்டத்தினை செய்தார்கள். இந்த ஹர்த்தாலுக்கு பதிலாக முற்றவெளி மைதானத்தில் ஒரு சத்தியாகிரக போராட்டத்தினை முன்னெடுக்கலாம்.

ஆனால் அரசியல்வாதிகள் மக்களை பயன்படுத்தி மக்களை நசுக்கும் முகமாக செயற்படுகின்றார்கள். இதை ஏற்க முடியாது.

கொழும்பில் நடந்தது ‘அரகல’ போராட்டத்தை மக்கள் தாமாகவே முன்வந்து முன்னெடுத்திருந்தார்கள்.

எந்த அரசியல்வாதியோ கட்சியோ அழைப்பு விடவில்லை.

அதேபோல மக்கள் தாமாக முன்வந்து தான் இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகள் இவ்வாறு ஹர்த்தால் போராட்டம் என அழைப்பு விடக்கூடாது.

எனவே தமிழ் கட்சிகள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனியும் பொதுமக்களை ஏமாற்றக் கூடாது. என்றார்.

https://youtu.be/noWuZ8at4qE?si=ijHUeM8g04lplDId

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு