ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின்போது நிதியமைச்சராக பதவிவகித்த ரவி கருணாநாயக்கவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கட்சியை பலமான நிலைக்கு கொண்டுவரக்கூடிய நபர் ரவி கருணாநாயக்க எனும் கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே நிலவுவதன் காரணமாக இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், ரவி கருணாநாயக்கவை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானத்திற்கு சிலர் மாத்திரம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவில் மேலும் சில பதவிநிலை மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.