ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இளம் தலைவரை நியமிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைமை பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைவிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவிடம், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
இதனை தவிர பொதுஜன பெரமுனவில் மூத்த தலைமைத்துவம் ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சியின் முன்னுதாரணமிக்க தலைமைத்துவம் இருப்பதாகவும் அந்த மூத்த தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வகிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சியின் தலைவர் பதவிக்கு பொறுத்தமான சிலர் இருப்பதால், எவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச இதன் போது சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.