இராணுவத்திற்குள் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சி 

Share

இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சந்திம வீரக்கொடிஎம்.பி. கருத்து தெரிவித்துள்ளமை வெறுக்கத்தக்கது. தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில்  பாதுகாப்பு பிரதானிகளின் முன்னிலையில் அநாகரீகமான முறையில் நடந்துக் கொண்ட.  அவரை குழுவில் இருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளேன் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் எம்.பி.யுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

 மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

சந்திம வீரக்கொடி எம்.பி. சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை முன்வைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் என்ற வகையில் எனது பெயரையும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு   வியாழக்கிழமை கூடியது.பாதுகாப்பு துறையின் வருடாந்த அறிக்கை தொடர்பில் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ,சுதர்ஷன தெனிபிடிய,ரவூப் ஹக்கீம், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் கலந்து கொண்டனர்.  சந்திம வீரக்கொடிஎம்.பி. குழுக் கூட்டத்துக்கு தாமதமாகவே வந்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு செயலாளர்,முப்படைகளின் தளபதிகள்,  பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டு கலந்துரையாடிய போது  சந்திம வீரக்கொடி எம்.பி.  விடயதானத்துக்கு அப்பாற்பட்ட வகையில் தேவையற்ற கேள்விகளை  எழுப்பினார்.

பாதுகாப்பு பிரதானிகளின் முன்னிலையில்  சந்திம வீரக்கொடி எம்.பி.அநாகரீகமாக நடந்துக் கொண்டதால் 225 எம்.பி.க்களினதும் சிறப்புரிமையும் மலினப்படுத்தப்பட்டுள்ளது.ஆகவே தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து     சந்திம வீரக்கொடி எம்.பி.யை  நீக்குமாறு சபாநாயகரிடம்  கோரியுள்ளேன்.

இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சந்திம வீரக்கொடி கருத்து தெரிவித்துள்ளமை வெறுக்கத்தக்கது. இராணுவத்தினரது ஒழுக்கம் பற்றியும் இவர் கேள்விகளை முன்வைத்துள்ளார்.இறுதிக்கட்ட யுத்தத்தில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இராணுவத்தினர் பாதுகாத்ததை இராணுவத்தின் ஒழுக்கம் என்றே குறிப்பிட வேண்டும் என்றார்.

https://youtu.be/noWuZ8at4qE

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு