இலங்கை கிரிக்கெட் பயிற்சி நிலைய தலைமை அதிகாரியும் நட்சத்திர பந்துவீச்சாளருமான சமிந்த வாஸ் தலைமையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
Jaffna stalion ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்திலும், வவுனியா நோர்த் ஸ்டார் செற்றிலும் இன்று முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களும் (6,7,8) பயிற்சிகள் இடம்பெறவுள்ளது.
இப் பயிற்சியில் பல்வேறு வயதுப் பிரிவினைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்குபற்றி வருகின்றனர்.
அவர்களுக்கான ஆலோசனைகளை சமிந்த வாஸ் வழங்கி வருகின்றார்.