கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் மீது கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பஸ் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கொழும்பு – மத்துகமவுக்கு சேவையில் ஈடுபடும் பஸ்ஸாகும்.
விபத்து காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
https://youtu.be/5tjLx2ZglVQ?si=eVjHf3vIHloUnRfi