நீதிபதியே நாட்டைவிட்டு ஓடுகிறாரெனில் சாதாரண மக்களின் நிலை?

Share

இந்த ஆட்சியில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் சிறந்த எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இப்படியான ஆட்சியில் நல்லிணக்கம் எப்படிச் சாத்தியமாகும்.? என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. வரை சென்று நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றார்.

ஆனால், இங்கு நீதிபதி ஒருவர் அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தலால் பணிபுரிய முடியாது என்று தெரிவித்துவிட்டு பதவி விலகியுள்ளார். இறுதியில் அவர் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.

பதவி விலகிய நீதிபதி தெரிவித்த விடயங்களுக்கு அரச உயர்பீடம் உடனே மறுப்புக் கருத்துக்களைத் தெரிவிக்காமல் உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். நீதிபதி ஒருவரே பதவி விலகி உயிரைக் காப்பாற்ற நாட்டைவிட்டு ஓடுகின்றார் எனில் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன? ஜனாதிபதி இந்த விடயத்தில் அதிக கரிசனை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு