சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிடபில்யூ நியுஸ் உடனான பேட்டியின் போது ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பியவேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்.
நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
அத்தோடு ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன என்பதற்காக நான் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.