ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ களமிறங்கவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ முன்மொழியப்பட்டாலும், சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதும் பேரணிகளை ஏற்பாடுசெய்து வருகின்றார்.
அதன் காரணமாக சரத் பொன்சேகா தொடர்பில் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு பல அறிவித்தல்களை வழங்கியுள்ளனர்.
ஆனால், எந்த அறிவிப்பையும் பொருட்படுத்தாமல் பொன்சேகா தனது பணியைத் தொடர்ந்து வருகிறார்.
இதனால் அந்தக் கட்சிக்குள் பெரும் மோதல் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.