எதிர்வரும் 20 வருடங்களில் வாகன விபத்துக்களால் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் சாத்தியம் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் வைத்தியர் சமன் தர்மரத்ன தெரிவித்தார்.
வீதி பாதுகாப்பு தொடர்பில் இடம்பெற்ற பயிற்சி பட்டறை ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த சில வருடகங்களாக இடம்பெற்ற வாகன விபத்துக்களுடன் ஒப்பிட்டதன் அடிப்படையிலேயே இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்வரும் 20 வருடங்களின் வாகன விபத்துக்கள் காரணமாக 40 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகுவதற்கும் சாத்தியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த விபத்துக்கள் காரணமாக அரசாங்கத்திற்கு 200 பில்லியன் ரூபாய் செலவினம் ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன விபத்துக்கள் தொடர்பில் கடமையாற்றிய மூன்று ஜனாதிபதிகளிடம் தாம் எடுத்துரைத்துள்ள போதிலும் எவரும் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் வைத்தியர் சமன் தர்மரத்ன தெரிவித்தார்.