எங்கள் வீட்டுப் பிள்ளையே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்

Share

அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி செயற்பாட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பஸில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷ கட்சி தலைமையகத்தில் கடந்த வாரம் முதல் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.

தொகுதி அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் சந்திப்பில் பங்கேற்று வருகின்றனர்.

சமகால அரசியல் மற்றும் கட்சியின் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் கட்சி செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளும், கருத்துகளும் கோரப்படுவதுடன், எவ்வாறு செயற்பட வேண்டும் என இதன்போது ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகின்றது என தெரியவருகின்றது.

இவ்வாறு நடைபெற்ற சந்திப்பொன்றின்போது, மொட்டு கட்சிக்கு ஜனாதிபதி தரப்பில் கவனிப்பு எதுவும் இல்லை,அமைச்சுப் பதவிகூட வழங்குவதில் இழுத்தடிப்பு தொடர்கின்றது என உள்ளக் குமுறல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மொட்டு கட்சி ஆதரவு வழங்கவுள்ள விவகாரம் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவ் வேளையிலேயே மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தை பஸில் வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு