தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும்இ தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் பிரதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில், தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அவர் உண்ணாவிரதமிருந்த நல்லூரின் வீதியிலும், நினைவாலயத்திலிலும் சமநேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து மலர் வணக்க நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதலே நல்லூரிலுள்ள திலீபனின் நினைவிடத்தை நோக்கி வடக்கின் பல பகுதிகளிலுமிருந்து நினைவேந்தல் ஊர்திகள் வருகைதந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நல்லூரில் தியாகதீபம் திலீபனின் வரலாறுகளை சுமந்த கண்காட்சியினை பெருமளவான மக்கள் தற்போது பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.