சிறிய குழந்தைகள் உடலை அழுக்காக்கி கொள்வது குறித்து பெரிதாக கணக்கில் எடுக்க தேவையில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள சவால் சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் என்ன சவால் விடுத்தார்?. மூன்று, நான்கு மாத குழந்தைகள் உடல் முழுவதும் அழுக்காக்கி கொள்ளும். சரத் பொன்சேகாவும் அதேபோன்றே வேலையை செய்கிறார்.
எவராவது அவரை கழுவி விடுவார்கள். எமது பலம் உறுதியானது.
நாங்கள் எமது அரசாங்கம் ஒன்றை அமைப்போம், அதில் அது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.