தற்போது இனக்கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான சந்தரப்பமொன்றை அரசாங்கம் எதிர்பார்த்து காத்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே, அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன், திலீபனின் நினைவு ஊர்தி, பெரும்பான்மை இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு முன்னறிப்பின்றி சென்றமையாலேயே குழப்பம் ஏற்ப்பட்டதாகவும், இவ்வாறான சந்தர்ப்பங்களை இனக்கலவரமாக மாற்றியமைக்க சில தரப்பினர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.