எதிர்வரும் தேர்தலில் 51 சத வீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று கட்சி வெற்றி பெறுவதற்காக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பிரசார நடவடிக்கைகளின் போது வேறு அரசியல் கட்சிகளை வளர்க்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்துமாறும் பசில், சிரேஷ்ட தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சி எடுத்த முடிவுகள் தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அதனை சிரேஷ்ட தலைவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் சகல சிரேஷ்ட தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.