உயிர்த்த ஞாயிறு தாக்குதல் http://உயிர்த்த ஞாயிறு தாக்குதல்குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது என தெரிவித்துள்ள ஆசாத் மௌலானாhttp://ஆசாத் மௌலானா பல கட்டுரைகளும் ஆசிரிய தலையங்கங்களும் எழுதப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்ற வேண்டுகோள்கள் எழுந்துள்ள அதேவேளை பல போலிச்செய்திகளும் வதந்திகளும் வெளியாகியுள்ளன.
எனது குடும்பத்தினரை அவதூறு செய்துள்ளனர். அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்.
நான் பிள்ளையானிற்காக பணிபுரிந்த போதிலும் நான் ஒரு ஆயுதமேந்திய போராளி இல்லை எனவும் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
நான் ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்த பழகவில்லை.
எனக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பிலும் பல விடயங்கள் தெரியும் என தெரிவித்துள்ளார்.