அரசியலுக்காக சில்லறைத்தனமான செயல்களில் ஈடுபடும் கஜேந்திரன்

Share

அரசியலுக்காக சில்லறைத் தனமான செயல்களில் ஈடுபடுவதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நிறுத்தவேண்டும் என பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘வடக்கு – கிழக்கில் உள்ள சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர்.

திலீபன் நினைவேந்தல் நிகழ்வு கூட இதன் ஓர் அங்கம்தான். திலீபன் நினைவேந்தலுக்காக வாகனப் பேரணியை நடத்தி நாட்டில் பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.

மஹிந்தவின் புண்ணியத்தால் நாட்டில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. யார் வேண்டுமானாலும் எங்கும் பயணிக்கக்கூடிய அமைதி நிலவுகின்றது.

எனவே, பாலில் சாணத்தைக் கலக்கும் வகையிலான செயலை அவர் செய்துள்ளார். அரசியலுக்காக சில்லறைத்தனமான செயல்களில் ஈடுபடுவதை கஜேந்திரன் நிறுத்தவேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு