மட்டக்களப்பு பெட்டிக்கலோ பல்கலைக்கழகம் விடுவிப்பு

Share

மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள பெட்டிகாலோ கெம்பஸ் இன்று புதன்கிழமை (20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பல்கலைக்கழத்திலிருந்து இராணுவத்தினர் இன்று வெளியேறியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (19) முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கெம்பஸை பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (20) நேரிடியாக கெம்பஸுக்கு விஜயம் செய்து கெம்பஸை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கெம்பஸை பொறுப்பேக்கும் நிகழ்வில் கல்குடா அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.ஹாரூன் ஸஹ்வி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம். தாஹீர், மௌலவி மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு