கொழும்பில் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றம் தடை

Share

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (19) நடத்த திட்டமிடப்பட்டிருந்த திலீபன் நினைவு தினத்தை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிறிஸ்தவ ஒற்றுமை இயக்கம், அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கோட்டை, கொம்பனி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிகழவுகளை நடத்த தடை விதித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு