தனக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எந்தவித அரசியல் ஒப்பந்தமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் நடைபெற்ற சதஹம் யாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவ்வாறான ஒப்பந்தம் இருந்திருந்தால் அதிக வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஜனாதிபதியாக இருந்திருப்பேன்.
இன்றும் சிலர் தமக்கு அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்க முன்வருவதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், தனிப்பட்ட நலன்களுக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை ஏற்க தாம் தயாரில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதி பதவியையோ, பிரதமர் பதவியையோ ஏற்க தயாராக இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.