அனுர யாப்பா-நிமல் லன்சா அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் விசேட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கூறப்படுகிறது.
இதனை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடனும் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அனுர யாப்ப-நிமல் லன்சா அணியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது அணியில் இணைந்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுர யாப்ப-நிமல் லன்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.