திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது
எனினும், இந்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் தொடர்பில் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதனை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்தது.
அதன்படி பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.