தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் Beth Van Schaack ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து இதன்போது கலந்தரையாடப்பட்டிருந்ததாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.
அத்துடன் தற்போது வெளியாகியுள்ள செனல் 4 ஆவணப்படம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.