யாழ்ப்பாணம், தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.