நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 26ஆம் நாள் இன்று பூங்காவனம் இடம்பெறவுள்ளது.
அதன்படி ,இன்று மாலை 5 மணிக்கு பூங்காவனம் நடைபெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து முருகப் பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழாவில் காலை 6 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியிருந்தன.
அதன் பின்னர் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்ற நிலையில் ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைந்தன.
தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், நாளைய தினம் இறுதி நாளாக மாலை 5 மணிக்கு வைரவர் உற்சவத்துடன் நல்லூர் ஆலயத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நிறைவு பெறவுள்ளது.