‘தளபதி 68’ படப்பிடிப்பு எப்போது?

Share

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்று இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

தளபதி 68 திரைப்படத்திற்காக 3டி ஸ்கேன் செய்வதற்காக விஜய் அமெரிக்கா சென்றார். இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார்.

இதனை அடுத்து தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் திகதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக சினேகா மற்றும் பிரியங்கா மோகன் நடித்க இருப்பதாக கூறப்படுகிறது.

https://youtu.be/BvAyb0oDg8E?si=XpDQXcaq6fKP8hKV

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு