மின்சாரக் கம்பியில் தேர் மோதுண்டதில் இரு இளைஞர்கள் பலி! – பசறையில் சோகம்

Share

பசறை, நமுனுகுல கந்தேஹேன கதிர்காமம் தேர் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், பூடவத்தை நமுணுகுல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கணேசன் ரமேஷ், 27 வயதுடைய பன்னீர் செல்வகுமார் ஆகிய இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். அத்துடன் 30, 43, 57 வயதுடைய மூவர் காயமடைந்து பசறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கந்தேஹேன கதிர்காமம் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை தெய்வானையுடன் புறப்பட்ட தேர் பெரஹர கந்தேஹேன, தேவதுர, பூட்டாவத்த ஆகிய கிராமங்களின் ஊடாக இன்று காலை திரும்பும் வேளை பூட்டாவத்த பகுதியில் குறித்த தேர் அதிவேக மின்சாரத்தைக் கடத்தும் வடத்தில் மோதுண்டதால் இவ்விபத்து இடம்பெற்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் நமுனுகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://youtu.be/L7XXbz0imOA

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு