பதுளை, அப்புத்தளை பிரதேசத்தில் இன்று (22) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு – அப்புத்தளை பிரதான பகுதியில் உள்ள ஹோட்டலுக்குள் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் அப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.