அடித்தால் திருப்பி அடியுங்கள்! – பெருந்தோட்ட மக்களுக்கு மனோ அறிவுரை

Share
அரசும் சட்டமும் எங்களுக்குப் பாதுகாப்பு தராவிட்டால் எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற ‘மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு’ நூல் அறிமுக விழாவில் மாத்தளை மாவட்ட ரத்வத்தை தோட்டத்தில் தமிழ் தொழிலாளர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தியமை தொடர்பில் கருத்துக் கூறிய மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது:-

“அதுதான் உங்களுக்குப் புரிகின்ற பாஷை என்றால் அதைப் பேச நாம் தயார் என்பதைப் பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகின்றேன்.

நீதியரசர் இளஞ்செழியன் தனது தீர்ப்பு ஒன்றில், தற்காப்புக்காகத் திருப்பி அடிக்கும் உரிமையின் சட்ட வரம்பு பற்றி கூறியுள்ளார். அதையே நான் இங்கு பிரதிபலிக்கின்றேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மைப் பேச்சுக்கு அழைக்கின்றார். ஆனால், நாம் பலமுறை சொல்லியும், அவரது அரசு, எமது மக்களுக்கு எதிராகப் பெருந்தோட்ட நிர்வாகங்கள் நடத்தும் அராஜகங்களைக் கண்டும் காணாமல் இருக்கின்றது.

ஆகவே, பெருந்தோட்டங்களில் எமது மக்களின் இயல்பு வாழ்கைக்கு உத்தரவாதம் தராவிட்டால், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனாதிபதியுடன் பேச்சில் கலந்துகொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்யும்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு