யாழில் அதிகாலை கோர விபத்து! இரண்டு இளைஞர்கள் சாவு!!

Share

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இளைஞர்கள் சாவடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் யாழ். வடமராட்சி, நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது 31), கரவெட்டி, வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது 29) ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு