குருந்தூர்மலையில் பொங்கல் விழாவைக் குழப்ப முயன்ற பௌத்த பிக்குவை விரட்டியடித்த தமிழர்கள்!

Share

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் இன்று தமிழ் மக்கள் அமைதியாகப் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அந்தப் பகுதிக்குள் ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார். இதனால் அங்கு சில நிமிடங்கள் பதற்ற நிலை ஏற்பட்டது.

தொல்பொருள் திணைக்களத்தின் கடுமையான விதிகளின்படி, குருந்தூர்மலையில் இன்று பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

எனினும், குறித்த பௌத்த பிக்குவுக்கு எதிராகப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழர்கள் கோஷமிட்டு அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அவர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கினர்.

https://youtu.be/5dIkkZXp4sA

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு