துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாத்தறை – வெலிகமை பிரதேசத்தில் வீதியோரத்திலிருந்து நேற்று (17) இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ். ரத்னஸ்ரீ (வயது 44) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், குறித்த நபர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும், கடந்த மாதம் வழக்கு ஒன்றில் கைதான அவர், கடந்த வாரம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.
https://youtu.be/5dIkkZXp4sA