ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் மாணவியிடம் தகாத முறையில் நடத்துகொண்டார் எனக் கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியை, மாலை வேளையில் ஆசிரியர் விடுதிக்கு வருமாறு குறித்த ஆசிரியர் நேற்றுமுன்தினம் (15) கூறியுள்ளார். இதன்படி மாணவியும் அங்கு சென்றுள்ளார். இது பற்றி அறிந்த மக்கள், குறித்த ஆசிரியரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்வதற்கு ஆசிரியர் முற்பட்டார் என மாணவி வாக்குமூலம் அளித்தார். அதன்பின்னர் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைக்காக மாணவி கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.