லங்கா சதொச நிறுவனம் ஒன்பது அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.
அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு நாளை (17) முதல் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 400 கிராம் உள்நாட்டுப் பால் மா 29 ரூபாவால் குறைக்கப்பட்டு 970 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோ கிராம் தாய்லாந்து நெத்தலி 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 1160 ரூபாவுக்கும், சிவப்பு சீனி ஒரு கிலோ கிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 350 ரூபாய்வுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோ கிராம் சோயா மீட் 25 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டு முறையே 625 மற்றும் 325 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோ கிராம் பாசுமதி அரிசி 15 ரூபாயால் குறைக்கப்பட்டு 675 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூடு 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 630 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 147 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் கடலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 555 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
https://youtu.be/a-hvPrFp2yE