சஜித், நாமல், அநுர என்னதான் கூத்துப் போட்டாலும் ரணில் களமிறங்கி வெல்வது உறுதி! – ஹரின் திட்டவட்டம்

Share

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவது நிச்சயம். அவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை. மூவின மக்களின் அமோக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர்வது உறுதி.”

– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சஜித் பிரேமதாஸ தம்பட்டம் அடிப்பதாலோ அல்லது நாமல் ராஜபக்ச மேடையில் முழங்குவதாலோ அல்லது அநுரகுமார திஸாநாயக்க போராட்டக்காரர்களைத் தூண்டுவதாலோ ரணில் விக்கிரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது.

தற்போது ஜனாதிபதி பதவியில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நாட்டுக்கான சேவையைத் திறம்படச் செய்து வருகின்றார். மூவின மக்களும் அவர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர் அடுத்த தடவையும் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்து நாட்டு மக்களுக்கு முழு மூச்சுடன் பணியாற்றுவார்.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு