மடு அன்னையின் திருவிழாவில் ரணில் பங்கேற்பு!

Share

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.

இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலியைப் பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை  தலைமையிலான ஆயர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

இந்நிலையிலேயே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விசேட வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

இத்திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள்  கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு