“நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன். நீங்கள் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) விகாரைகளைத் தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர் மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்குச் சும்மா திரும்பி வரமாட்டேன். உங்களின் (வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள்) தலைகளைக் கையில் சுமந்து கொண்டுதான் களனிக்கு வருவேன்.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (13) முற்பகல் 11.55 மணிக்கு ‘ஹிரு’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியில் மேர்வின் சில்வாவின் இந்த உரையும் ஒளிபரப்பட்டது. அவரின் முழு உரையாக அல்லாமல் அவர் ஆற்றிய உரையில் ஒரு பகுதியாகவே அது இருந்துள்ளது.
இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே மேர்வின் சில்வா வலம் வருகின்றார். ஊடக நிறுவனத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை, அரச ஊழியரை மரத்தில் கட்டிவைத்து தாக்கியமை, முன்னேஸ்வரம் ஆலயத்துக்குள் புகுந்து வேள்வி பூஜையை தடுத்து நிறுத்தியமை என அவரின் அடாவடி செயற்பாடுகளை பட்டியலிடலாம். இப்படியான அவரே தற்போது சர்ச்சைக்குரிய மேற்படி உரையையும் ஆற்றியுள்ளார்.
https://youtu.be/KSJzcmcM3a4